நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : ஐநா கடும் கண்டனம்

Default Image

நைஜீரியாவில் உள்ள அடமாவா மாநிலத்தில் இருக்கும் முபி நகரில் ஒரு மசூதி இருக்கிறது. நேற்று இந்த மசூதிக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். இவன் பெயர் போகோ ஹராம். இவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை மசூதியில் வைத்து வெடிக்க செய்தான்.

இந்த பயங்கர தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐநா சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐ.நா. சபை துணை செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ‘வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக நைஜீரிய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்