சென்னை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சா…!!!
சென்னை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ஆட்டோ நிறுத்தம் அருகே 2 பைகள் கேட்பாரற்று கிடந்தது. இந்நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர் அந்த பகை கைப்பற்றி, சோதனை செய்ததில் 1 1/2 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ கஞ்ச இருப்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, மத்திய நுண்ணறிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பால்ராஜிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.