அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு….!!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016ல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதிபர் டிரம்ப் மீது, ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்கள் பாலியல் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், 72 லட்சம் வரை பணம் கொடுத்து அவர்களின் வாயை அடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்த நீதிமன்ற விசாரணையின்போது, கோஹன் இதை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், தற்பொழுது இந்த விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டுவர முடியும் என்று கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி உள்ளதால் அந்த சபையில் கண்டன தீர்மானம் கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் பதவியில் இருந்து டிரம்ப் வெளியேறியவுடன், அவரை சிறைக்கு அனுப்பவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.