9 ஆயிரம் கோடி கடனை வாங்கி வங்கிகளுக்கு டாட்டா காட்டி மல்லுகட்டும் மல்லையா..!நாட்டை விட்டு துரத்த உத்தரவு கிட்டியது..!பிரிட்டன் உள்துறை தகவல்…!

Default Image

இந்தியாவில் 9 ஆயிரம் கோடிகளை வங்கிகளில் கடனாக பெற்றவர் தொழிலதிபர் விஜய்மல்லையா கடனாக பெற்றவர் கடனை திருப்பி செலுத்தாமல் இந்தியாவை விட்டு 2016 ஆம் ஆண்டு தப்பி சென்றார்.

இந்நிலையில் தப்பி சென்றவரை தேடும் பொருட்டாக களமிரங்கிய இந்திய படைகள் லண்டனில் விஜய்மல்லையா உல்லாசமாக உலாவுதாக கண்டுப்டித்து உறுதிப்பட தெரிவிக்கப்பட்ட நிலையில்  லண்டன் அரசிற்கு தகவலை அளித்தது  இந்தியா மேலும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுத்திய நிலையில் இழுபறி நடந்து வந்த நிலையில் லண்டன் நீதிமன்றத்தில் லண்டன் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related image

இதனால் மல்லையா நாடு கடத்துவதற்காக வேலைகள் நடைபெறும் என்ற நிலையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தப்பி சென்ற மல்லையா தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு பிரிட்டன் உள்துறைக்கு வந்து சேர்ந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீதி தெரிவித்துள்ளார்.

Related image

இது குறித்து தெரிவித்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  2 மாதத்திற்குள் பரிசீளித்து  முறைப்படி உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மற்றும்  உள்துறையின் பொறுப்பு என்றார்.நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய மல்லையா திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay