அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ உதவிகள் சென்றடைய வேண்டும் : நடிகை கெளதமி
அனைத்து கிராம மக்களுக்கும் மருத்துவ உதவிகள் சென்றடைய வேண்டும் என நடிகை கெளதமி மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கும்பகோணத்தில் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பேருந்துகள் செல்ல முடியாத கிராமங்களில் உள்ள மக்களுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு நடிகை கெளதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.