சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு முதலமைச்சர் ரூ.75 லட்சம் நிதி…
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். சென்னையில் வரும் 13ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை இந்தோ சினி அப்பிரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச்செயலாளர் தங்கராஜ் சந்தித்து பேசினார். இதனையடுத்து அவரிடம் முதலமைச்சர் பழனிசாமி 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கடந்த ஆண்டுகளில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, 75 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.