ராஜஸ்தானில் படு தோல்வி எதிரொலி…! முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் வசுந்தரா ராஜே…!
ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் வசுந்தரா ராஜே.
இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.சத்தீஸ்கர்,மத்திய பிரதேசம் , ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் கட்சியும்,மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் வசுந்தரா ராஜே.அதன் பின்னர் அவர் கூறுகையில், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள்.கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது.ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன் என்று வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.