மிசோரம் சட்டப்பேரவை…!ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ்…!ஒரு இடத்தை கைப்பற்றிய பாஜக..!
மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி முடிந்தது. மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக நிறைவடைந்து முடிவுகள் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 தொகுதிகளை மிசோ தேசிய முன்னணி கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 5 இடத்தில் வெற்றி பெற்றது. பா.ஜ.க ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது.
ஆளும் கட்சியான காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது.