5 மாநில தேர்தல் முடிவு:பாஜக தனது செல்வாக்கை இழந்து விட்டது…!ரஜினிகாந்த் அதிரடி கருத்து
பாஜக செல்வாக்கை இழந்ததையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.சத்தீஸ்கர்,மத்திய பிரதேசம் , ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் கட்சியும்,மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பாஜக தோல்வி தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கை இழந்ததையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.