இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சுக்கு தடை…!!

Default Image

முறையற்ற பந்து வீச்சின் காரணமாக இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக தடை விதித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலங்கை அணி இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியின் போது இலங்கையின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சு குறித்து புகார் எழுந்தது. அவரது பந்து வீச்சு முறையற்றதாக உள்ளதென்றும், மேலும், இது குறித்து விசாரணை நடத்தவும், கோரிக்கைகள் எழுந்தன.

இது தொடர்பாக ஐசிசி அவரது பந்து வீச்சை பரிசோதித்ததில், ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்