நாட்டின் மூத்த குடிமகனை நாளை சந்திக்கும் எதிர்கட்சிகள்..!வெடிக்க காத்திருக்கும் பிஜேபியின் சர்வாதிகார தலையீடு..!!
எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் நாளை குடியரசு தலைவரை சந்திக்க முடிவு செய்துள்ளது.
டெல்லியில் இன்று மாலை நாடு முழுவதும் உள்ள 21 எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் ஆளுகின்ற பிஜேபிக்கு எதிராக அணி திரண்ட எதிர்கட்சிகள் முக்கிய அலோசனையில் ஈடுபட்டது.
இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் அண்மை காலமாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த ராஜினா எதிர்கட்சிகளை கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
மத்திய அரசு தனது சர்வாதிகார தலையீட்டை ரிசர்வ் வங்கி வரைக்கும் எடுத்து சென்றுள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் நாளை நாட்டின் மூத்த குடிமகனாக விளங்கும் குடியரசு தலைவரிடம் இது குறித்து முறையீட எதிர்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.