சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து தயாரிப்பாளர் கலாநிதிமாறன் என்ன கூறியுள்ளார் தெரியுமா…?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2.0 படமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், இந்த விழாவில் பேசிய கலாநிதிமாறன் ” ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார், அவரோட இடத்துக்கும் யாராலயும் வர இயலாது. ” என்று கூறியுள்ளார்.
பல நாட்களாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இவர் இவ்வாறு கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் இன்னும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.