இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…!!!
பூந்தமல்லியில் தொழிலாளி இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பூந்தமல்லி, டிராங்க் ரோடு அருகே ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் வெளியானது இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பவுல் ராஜ் என்பவர் அந்த பகுதியில் சாலையோரம் வசிப்பவர். இவர் அந்த பகுதியில் குப்பைகள் மற்றும் இரும்பு பொருட்களை எடுத்து விற்பனை செய்ப்பவர் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் அவர் அந்த பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டத்தில் இரண்டாவது மாடியில் இரவில் படுத்துறங்குபவர் என்பதும், நேற்று இரவு இவர் அந்த மாடியில் நடந்து கொண்டு இருந்த போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.