அடிலெய்டு டெஸ்ட்:இந்திய அணி வரலாற்று சாதனை…!
அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன் எடுத்தது. புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லியான் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணி வெற்றிக்கு ஒரு விக்கெட் தேவை பட்ட நிலையில், லியானும் ஹசல்வுட்டும் விக்கெட்டை எளிதாக விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். பின்னர் லியான் விக்கெட்டை அஸ்வின் சாய்த்ததும் ஆஸ்திரேலியாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.அந்த அணி 291 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது.
இந்நிலையில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை என்ற நிலையை மாற்றியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்றுள்ளது.