பச்சை மிளகாய் என்றாலே காரம் என்று தான் அர்த்தம்…!!! ஆனால் அதில் உள்ள பசுமையான நன்மைகள் பற்றி தெரியுமா….?
பச்சை மிளகாய் என்றாலே காரம் என்று தான் அனைவரும் நினைப்போம். ஆனால் நம் சமையல்களில் பச்சைமிளகாய் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். ஆனால் யாரும் இதை சாப்பிடுவதில்லை. எல்லாரும் இதை ஒதுக்கி தான் வைக்கிறார்கள். பச்சை மிளகாய் உண்பதால் நம் உடலில் உள்ள பல நோய்களில் இருந்து நாம் விடுதலை பெறலாம்.
சத்துக்கள் :
பச்சை மிளகாய் நமது உடலுக்கு தேவியான அனைத்து ஆற்றல்களையும் கொண்டுள்ளது. பச்சை மிளகாயில், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது.
பயன்கள் :
கொழுப்பை கரைக்க :
உணவில் சேர்க்கப்படும் மிளகாயில் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதில் குறைவான கொழுப்பு சத்து உள்ளதால் உடலில் உள்ள லாவுக்கு அதிகமான கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைக்கிறது.
செரிமானம் :
நமது சமையலில் மிளகாயை சேர்த்துக்கொள்ளும் போது செரிமான பிரச்சனைகளை தவிர்த்து சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
தொற்று நோய்:
பச்சை மிளகாயில் அண்டி பாக்டீரியா அதிகமாக காணப்படுகிறது. இதனால் தோருக்கு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. முக்கியமாக சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
பச்சை மிளகாயை நாம் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய் ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
மன அழுத்தம் :
பச்சை மிளகாய் மூளைக்குள் எண்டோஃபிரன்சை உற்பத்தி செய்கிறது. இதனால் மூளைக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தையும் நீக்குகிறது.