கூகிள் டூடுல்: ருக்மபாயி ரவுட்டின் பிறந்த நாள் கொண்டாடும் விதமாக கூகிள் கௌரவம் …
கூகுள் ஒவ்வொரு சாதனையாளர்களையும் கௌரவிக்கும் வகையில் தன் பக்கத்தில் டூடுல் செய்து வெளியிடும். அந்த வகையில் இன்று இந்திய மருத்துவர் ருக்மாபாய் ராடின் பிறந்தநாளுக்கு சமர்ப்பித்துள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் இவர்.
இந்த நாளில் 1864ல் ஜனார்தன் பாண்டுரங் மற்றும் ஜெயந்திபாய் என்பவருக்கு மகளாக மும்பை தச்சர்கள் சமூதாயத்தில் பிறந்தார். இன்று அவரது 153வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் மருத்துவர் மற்றும் மருத்துவமனை தோற்றத்தில் டூடுல் செய்து வெளியிட்டுள்ளனர்.
ருக்மாபாய்க்கு விருப்பம் இல்லாமல் 11 வயதிலேயே தாதாஜி பிகாஜி என்பவருடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். அவரது கணவருடன் கட்டாயப்படுத்தி வாழ்ந்தாலும் ருக்மாபாய் தனது படிப்பை கைவிடவில்லை.
1884 மார்ச்சில் மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமையை மீட்டெடுக்க மும்பை உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால் இருக்கும் சட்டத்திற்கு இணங்க வேண்டும் அல்லது சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தது. புரட்சி ஏற்படுத்தும் விதமாக ருக்மாபாய் கணவருடன் வாழ்வதற்கு பதிலாக சிறை தண்டனையை ஏற்று கொள்வதாக கூறினார்.
அவர் சிறைத்தண்டனை ஏற்று 68 வருடம் கழித்து “ஹிந்து திருமண சட்டம்” 1955ல் கொண்டுவரப்பட்டது.
ஹிந்து லேடி என்னும் புனைபெயரில் செய்திதத்தாளில் ஹிந்து கட்டாய திருமணத்தை எதிர்த்து பல கடிதங்கள் எழுதியுள்ளார். அதன் மூலம் பல ஆதரவு அவருக்கு கிடைத்தது. அதன் பின் அவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தபொழுது, அவருக்காக நிதி திரட்டி அவரை இங்கிலாந்தில் உள்ள லண்டன் மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்தனர். இங்கிலாந்தில் மருத்துவம் பயின்று திரும்பிய இவர் ராஜ்கோட் பெண் மருத்துவமனையில் பல வருடம் பணிப்புரிந்தார்.
மருத்துவ சேவை மட்டுமில்லாமல், சமூக அக்கறையுடன் பல நல்ல காரியங்களில் ஈடுப்பட்டுள்ளார். குழந்தை திருமணம், பெண்கள் பர்தா முறை என அனைத்தையும் எதிர்த்து எழுதியுள்ளார். இந்த புரட்சிபெண்மணி 1991ல் தனது 91 வயதில் இறந்தார்.