கார்டூனிஸ்ட் பாலா வான்டடு லிஸ்டில்
சமிபத்தில் நெல்லையில் கந்துவட்டிக்கு எதிராக தீக்குளித்து இறந்த குடும்பத்தினருக்கு நிகழ்ந்த அநிதியை கண்டு கோபப்பட்டு கார்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிசித்திரம் வரைந்தார்.கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்தனர்
இதையடுத்து, சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்த போலீசார், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாலா தரப்பில் ஜாமின் கோரப்பட்டதை தொடர்ந்து, அவரை ஜாமினில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
பாலா தனது முகநூல் பக்கத்தில் தனக்கு நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்
திருநெல்வேலியில் ஒரு முக்கியமான விசயம் நடந்தது..
அதை சொல்லவில்லையென்றால் வரலாறு மன்னிக்காது..
போலீஸ் போட்டோகிராஃபர் வந்து, வலது பக்கம் பாருங்க.. இடதுபக்கம் பாருங்க.. கொஞ்சம் சாய்வா பாருங்க.. என்று எல்லா கோணத்திலும் என்னை நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார்..
இதுவரை எவ்வளவோ விழாக்களில் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த போலீஸ் புகைப்பட கலைஞர் எடுத்த கோணம் மாதிரி வரவே வராது..
அந்த நொடி தான் தோணுச்சு.. “ஒரு கார்ட்டூனிஸ்ட் எவ்வளவு பெரிய பயங்கரவாதினு..”
நெல்லை பத்திரிகை நண்பர்கள் எஸ்பி அலுவலகம் பக்கம் போனீங்கன்னா.. வாண்டட் லிஸ்ட்டில் என் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடையாதீங்க