இன்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்.!
எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரின்போது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.