IND VS AUS டெஸ்ட் நடுவே ஆட்டம் போட்டு கடுப்பேத்திய கோலி..!!வைரலாகும் வீடியோ உள்ளே..!!
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.இதில் இந்திய அணி விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு இடையே விளையாட்டு மைதானத்தில் இசை ஒன்றிற்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த சுவாரஸ்யமான சம்பவமானது அடிலெய்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தின் இடையே அப்பப்ப மழை குறுக்கிட்டாதல் ஆஸ்திரேலிய அணி விரர்கள் சற்று கடுப்பான நிலையில் இந்த மழைக்கு நடுவே சின்ன நடனத்தை போட்டுள்ளார் கோலி.அவர் நடனமாடிய இந்த காட்சிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த டெஸ்ட்டிலும் கோலி சாதிக்கவே செய்தார்.இந்தியாவை பொருத்தவரை 1000 ரன்களை கடந்தவர்கள் என்றால் கிரிக்கெட் கடவுள் சச்சின் மற்றும் லட்சுமணன் மற்றும் ராகுல் டிராவிட் இவர்களுக்கு பின் தற்போது விராட் இதுலயும் இணைந்துவிட்டார்.