"பாரதீய ஜனதா கட்சி இஸ்லாம் மதத்திற்கு எதிரான நிலைப்பாடு"பாகிஸ்தான் பிரதமர் விமர்சனம்…!!
பாரதீய ஜனதா கட்சி இஸ்லாம் மதத்திற்கு எதிராகவும் , பாகிஸ்தானுக்கு எதிராகவும் நிலைப்பாட்டை கொண்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பயங்கரவாதம் காரணமாக நடைபெற இருந்த பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது.இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்தார்.ஆனால் இந்தியா பாகிஸ்தானின் பேச்சுவார்த்தையை ஏற்கவில்லை.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அளித்துள்ள பேட்டியில் இந்தியாவில் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி இஸ்லாம் மதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்று விமர்சித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து இந்தியா ,பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com