யூ-டியூப் டாப் டரெண்டிங்கில் இவர்கள்தான் டாப் 10! அதில் இரண்டு இடங்களை பிடித்த சூப்பர் ஸ்டார்!!!
ஒரு படம் புதிதாக தயாரானால் அதன் மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தையும் யுடியூபில் பதிவேற்று விடுகின்றனர். இதனால் கிடைக்கும் வரைவேற்பையே படத்திற்கு புரோமோஷனாக்கி விடுகின்றனர்.
அப்படி யூடியூபில் பதிவேற்றி டாப் ட்ரெண்டிங்கில் இருந்த வீடியோக்களில் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பது, சஞ்சய் தத்தின் பயோபிக்கா வெளியான சஞ்சு பட ட்ரெய்லர்தான். அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவான 2.O படத்தின் ஹிந்தி ட்ரெய்லர் உள்ளது.
அடுந்ததாக கபாலி டீசர் டாப் ட்ரெண்டிங்கில் ஆறாவது இடத்தில் உள்ளது. 10வது இடத்தில் ஷாருகானின் ஜீரோ பட டீசர் உள்ளது. இதனை யூடியுப் இணையதளம் தற்போது வெளியிட்டுள்ளது.
DINASUVADU