நாங்க கேட்கவே மாட்டடோம்! கோரிக்கை வைத்த தயாரிப்பாளர் சங்கம்!! நிராகரித்த சன் பிக்சர்ஸ்!!!

Default Image

2019 பெங்கல் தினத்தை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதவுள்ளன. ரஜினி – அஜித் படங்கள் நேரடியாக களத்தில் குதிப்பது இதுவே முதல் முறை. இதில் விஸ்வாசம் படக்குழுவிலிருந்து இன்னும் டீசர், பாடல்கள் என எந்த அறிவிப்பும் செய்யாமல் உள்ளது.
ஆனால் பேட்ட தரப்போ, பட வேலைகளை வேக வேகமாக இரண்டு பாடல்கள் , டிசம்பர் 9இல் இசை வெளியீடு என வேகவேகமாக நடத்தி வருகிறது. இதில் விஸ்வாசம் திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே திரையரங்குகளை புக் செய்து அந்த திரையரங்குகளில் பட விளம்பரங்களை விநியோகிஸ்தர்கள்.ஆரம்பித்து விட்டனர்.
இதன் குறித்து , தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகிஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் சன் பிக்சர்ஸ் உடன் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்குவது குறித்து பேசப்பட்டது. ஆனால், சன் பிக்சர்ஸ் பொங்கல் ரிலீஸிலிருந்து பின் வாங்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
ஆனால் விநியோகிஸ்தர்கள் தரப்போ, இரண்டு பெரிய நடிகர்கள் படம் வெளிவந்தால் ஓபனிங், வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படும் என புல்ம்பி வருகின்றனர்.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்