மறைந்த நெல் ஜெயராமனின் உடல் தகனம் செய்யப்பட்டது. …!
மறைந்த நெல் ஜெயராமனின் உடல் இறுதிச்சடங்கிற்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.
உடல் நல குறைவு காரணமாக நெல் ஜெயராமன் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இவருக்கு வயது 50 ஆகும்.
இந்நிலையில், இவருக்கு திரைப்பட நடிகர்களான சிவகார்த்திக்கேயன் மற்றும் கார்த்திக் ஆகியோர் உதவி செய்தனர். இதன் பின் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ‘நெல்’ ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியை உடனடியாக வழங்க வேளாண்துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.அதுவும் வழங்கப்பட்டது.
மருத்துவமனையையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நெல் ஜெயராமன் காலமானார்.சென்னையில் தேனாம்பேட்டை அப்போலோமருத்துவமனையில் நேற்று காலை 5:10 மணிக்கு உயிர் பிரிந்தது.சென்னை தேனாம்பேட்டை ரத்னாநகர் 2வது தெருவில் நெல் ஜெயராமன் உடல் வைக்கப்படுகிறது. நெல் ஜெயராமன் உடலுக்கு நேற்று காலை 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடுவிற்கு கொண்டு செல்லப்பட்டது.நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு கட்டிமேடுவில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதன் பின்னர் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.