”ஜிமிக்கி கம்மல்” பாடலின் தமிழ் அர்த்தம் என்ன ?
பாடல் :
‘என்டம்மெட ஜிமிக்கி கம்மல்!
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!’
பொருள் :
என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மல்
அப்பா திருடிக் கொண்டு போயிட்டார்.
(அதை விற்று வாங்கிய)
என்னுடைய அப்பாவின் பிராந்தி பாட்டலை,
(இதனால் கோபமடைந்த)
என்னுடைய அம்மா குடித்து தீர்த்தார்.
இதில் என்ன அப்படி ஒரு கேவலம் என தெரியவில்லை.இதைவிட கேவலமான தமிழ்த்திரைப்படப்பாடல்கள் ஏராளம் உண்டு.
இவர்கள் கேவலம் என சொல்லுவது அம்மா சாராயம் குடித்தார் என்பதுதான்.அப்பா திருடினார்.அம்மா அதனை குடித்துவிட்டாள்.தானுக்கு தீனி சரியாப்போச்சு.
ஆண்கள் குடித்தால் உடல்நலக்கேடாம்,
பெண்கள் குடித்தால் ஒழுக்கக்கேடாம் !
தற்போதைய சூழலில் குடி இருவருக்குமே உடல்நலக்கேடுதான்.
இந்த பாட்டையே கேவலம் கூடாது என சொல்லும் ஆய்வறிஞர்கள்
கீழ் கண்ட இந்த பாட்டை காலம் காலமாக நம் வீடுகளுக்குள் வந்து சொல்லிக்கொண்டிருக்கிறானே அதன் அர்த்தம் தெரியுமா?
பாடல் :
ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:
பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.
விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.
ஆதாரம் : அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியுள்ளது.
( http://thathachariyar.blogspot.in/2010/12/blog-post_02.html )
‘இது திருமணங்களில் பார்ப்பான் சொல்லும் மந்திரம் மற்றும் விளக்கம்’
இந்த பாடலை மானமுள்ள தமிழர்கள் இனியும் அனுமதிக்கலாமா என கேட்பதில்லையே ஏன்?
ஆபாச மந்திரங்கள் சொல்லும் புரோகித திருமணங்களை வெறுத்து ஒதுக்குவோம் !
Thanks to Theekkathir