மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக ஆளுநர் இன்று டெல்லி பயணம்…!!
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, பிரதமரிடம் ஆலோசனை மேற்கொள்ள, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார்.
மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நேற்று கூடியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து இன்று டெல்லி செல்கிறார். அங்கு, பிரதமர் மோடியை சந்தித்து, மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பின், அவர் இன்று மாலையே சென்னை திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.