ரூ 1,00,00,000 பரிசு…அமைச்சரின் தலைக்கு விலை….இந்தியாவில் வாழ விட மாட்டோம் என எச்சரிக்கை…!!
உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில மந்திரி சித்து தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்டு வருகின்றார். ராம்கஞ்ச் மண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியையும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.இதனையடுத்து சித்து பேட்சால் ஆத்திரமடைந்த இந்து யுவவாகினி அமைப்பினர் சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து யுவவாகினி அமைப்பினர் அறிவிக்கையில் ‘‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பஞ்சாப் மந்திரி சித்துவின் தலையை துண்டித்து கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’’ என அறிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் தருண் சிங் பேசுகையில், ‘‘சித்து பாகிஸ்தானை புகழ்கிறார். சொந்த நாட்டுக்கு எதிராக பேசுகிறார். இது மன்னிக்க முடியாதது. அவர் பாகிஸ்தானுக்கு போய் விடட்டும் அல்லது நாங்கள் அவரை இந்தியாவில் வாழ விட மாட்டோம்’’ என எச்சரித்துள்ளார்.இந்து யுவவாகினி அமைப்பு என்பது 15 வருடங்களுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.