கல்வி அமைச்சர் முட்டாள்தனமான கேள்வி; அதிருப்தில் ஆசிரியர்கள் ..!
பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் மாநில கல்வி அமைச்சர்அரவிந்த் பாண்டே பல பள்ளிகளுக்கும் திடீர் வருகை புரிந்து சோதனைகள் செய்கிறாராம். பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் அவர்களது அறிவுத்திறனை சோதிக்கும் வண்ணம் பல கேள்விகள் கேட்கிறாராம். அவ்வாறு அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் சரியான பதில் கூறினாலும் இவர் கிறுக்குத்தனமாக தனது சொந்த பதில்களைக் கூறி திக்கு முக்கடவைக்கிறாராம்.
உதாரணமாக ஒரு கணக்கு ஆசிரியரிடம் இவர் கேட்ட கேள்வி. மைனஸ் பிளஸ் மைனஸ் என்ன? ஆசிரியை கூறிய பதில் மைனஸ். அதனை மறுத்த அமைச்சர் மைனஸ் பிளஸ் மைனஸ் இஸ் பிளஸ் என்றாராம்.”இந்த சிறிய உண்மை கூட தெரியாமல் எவ்வாறு பாடம் எடுக்கிறாய்” என்று கோபமாக கேட்டாராம். அருகில் நின்ற தலைமை ஆசிரியரும் மந்திரியை எதிர்த்து பேச துணிச்சல் இன்றி இருந்தார் .இதனால் அமைச்சர் ஆசிரிகைகளுடன் சண்டை போட்டாராம்.