வசூல் மன்னன் 2.O! முதல் வார பிரமாண்ட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!!!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தது.
இப்படம் ரிலீஸான நாள் முதல் ரசிகர்களிடம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்ததால் உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படம் முதல் வார பாக்ஸ் ஆபிஸில் இந்தியாவில் 392 கோடியும், வெளிநாடுகளில் 128 கோடியும், மொத்தமாக 7 நாளில் சுமார் 520 கோடிகளை வசூலித்துள்ளது. மேலும் படம் இந்த வாரம் சனி, ஞாயிறுகளில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
source : cinebar.in