மயிலப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில்சிலை மாயம்…!விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டது..!
பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பான புகாரை விசாரிக்க இந்துசமய அறநிலையத்துறை மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் தொடர்ப்பட்ட வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இந்துசமய அறநிலையத்துறை வழக்கறிஞர் மயில் சிலை விவகாரத்தை விசாரிக்க ராமேஸ்வரம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆகிய கோயில்களின் இணை ஆணையர்கள் மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.இந்நிலையில் நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏற்கனவே நடத்தி வருகின்ற விசாரணையை இனியும் தொடரலாம் என அறிவுறுத்தினர்.மேலும் விசாரணை குறித்த அறிக்கைகளை 2 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.