இனி ஆதார் வேண்டுமா..?வேண்டாமா..?நீங்களே தேர்வு செய்யுங்கள்..!மத்திய அரசு புது ரூட்…!!
தனி மனிதனுக்கு ஆதார் கட்டாயம் என்று மக்களை அடிப்படைகளை ஆதாருடன் இணைத்தது மத்திட அரசு.எதற்கு எடுத்தாலும் ஆதார் என்று ஒரு சமயத்தில் ழுழங்கப்பட்டது.இந்நிலையில் தற்போது ஆதார் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நாட்டு குடிமக்களே தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பை வழங்க மத்திய அரசு சட்டத்திருத்தத்தில் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆதார் அனைத்திலும் இணைக்கப்பட்ட நிலையிலும் ஆதார் எண்ணை தனியார் நிறுவனங்கள் தங்கள் அடையாள ஆவணமாக பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது உத்தரவிட்ட நிலையிலும் பான்-ஆதார் இணைப்பு சட்டத்தை உறுதிப்படுத்தி செயல்படுத்தியது.மேலும் இந்திய திருநாட்டில் 18 வயது பூர்த்தி அடைந்த ஒருஅ நபர்க்கு ஆதார் வேண்டுமா? வேண்டாமா என முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மற்றும் ஆதார் எண், பயோ மெட்ரிக் தகவல் உள்ளிட்ட அனைத்தும் திரும்பப் பெற்று கொள்ளும் வாய்ப்பை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த கூடிய வகையில் சட்டத் திருத்தம் அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.