நம்முடைய உரிமைகள் என்னென்ன…? மனித உரிமை வழங்கும் சிறப்பம்சம்…!!

Default Image

மனித உரிமை என்பது மனிதர்கள் அனுபவிக்கக் கூடிய நியாயமான சலுகைகளாகும்.
மனித உரிமைகள் இன்றி மனிதனால் மனிதனாக வாழ இயலாது. உரிமைகளும் சுதந்திரமுமே மனிதர்களின் குணங்களையும், அறிவுக் கூர்மையையும் மற்றும் திறமைகளையும் நிர்ணயிக்கிறது.மனித உரிமைகளை அரசியல் அறிஞர்கள் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். அவை
1) அறநெறி உரிமைகள்
2) சட்ட உரிமைகள்
அறநெறி உரிமைகள் :
சமுதாயத்தால் எடுத்துச் சுட்டிக்காட்டப்பட்ட அறநெறிகள் அடிப்படையில் பின்பற்றப்படும் உரிமைகள் அறநெறி உரிமைகள் ஆகும். அதாவது சமுதாயத்தால் அங்ககீகரிக்கப்பட்டவை. இந்த உரிமைகளுக்கு சட்டப் பிண்ணனி கிடையாது. சட்டத்தால் காக்கப்படுபவை அல்ல. எந்த நீதிமன்றத்தாலும் இவ்வுரிமைகளைக் கட்டுப்படுத்த இயலாது. எடுத்துக்காட்டாக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை எல்லா சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஒருவேளை குழந்தைகள் நலனில் பெற்றோர் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட அவர்களை எந்த நீதிமன்றமும் தண்டிக்க முடியாது. அதாவது அறநெறி உரிமை என்பது தார்மீகத் தன்மையைச் சார்ந்ததாகும்
சட்ட உரிமைகள் :
இவ்வகை சட்டங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டு, நீதிமன்றங்கள் மூலம் காக்கப்படுகின்றன. சட்ட உரிமைகளை மீறியிவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக 1956ம் ஆண்டு இயற்றப்பட்ட தந்தையின் சொத்திலிருந்து பெண்ணுக்கு கட்டாயமாகப் பங்கு உண்டு என்ற சொத்துரிமை சட்டம் மீறப்படும் போது பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்குச் சென்று நீதி பெறலாம்.
மேலும் சட்ட உரிமைகள் கீழ்க்கண்ட மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1) வாழ்வியல் உரிமைகள்
2) அரசியல் உரிமைகள்
3) பொருளாதார உரிமைகள்
வாழ்வியல் உரிமைகள்
1) வாழ்வதற்கான உரிமைகள்
2) சுதந்திரமாக வாழும் உரிமை
3) வேலை செய்யும் உரிமை
4) கல்வி உரிமை
5) சொத்துரிமை
6) ஒப்பந்த உரிமை
7) பேச்சுரிமையும் எழுத்துரிமையும்
8) சங்கம் அமைக்க உரிமை
9) சமய உரிமை
10) சமத்துவ உரிமை
11) இல்லற வாழ்வு உரிமை ஆகியன…
அரசியல் உரிமைகள்
1) ஊக்கமளிக்கும் உரிமை
2) தேர்தலில் போட்டியிடும் உரிமை
3) அரசுப்பணி வகிக்கும் உரிமை
4) முறையிடு செய்யும் உரிமை
5) அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை ஆகியன…
பொருளாதார உரிமைகள்
1) வேலை செய்யும் உரிமை
2) வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை
3) நியாயமான வேலை நேரத்தைக் கோரும் உரிமைகள்
4) தொழிற்சாலைகளில் தன்னாட்சி உரிமை ஆகியன…
DINASUVADU.COM 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்