அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்த ரஜினிகாந்தின் அடிச்சுவடுகள்…!!!
தனது சிறுவயது முதல் கொண்டு விடா முயற்சி ஒன்றையே கையில் ஏந்தி கொண்டு வெற்றியை கண்டவர் ரஜினிகாந்த். இவர் தனது பள்ளி வாழ்வை முடித்து, நடத்துனராக இருந்து, திரைப்படத்துறையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்து, தற்போது அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது ஆளுங்கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் கருத்து கூறியதால் அக்கட்சி தோற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதாக பலரும் கேள்விகள் எழுப்பி வந்தாலும், அன்றிலிருந்து இன்று வரை மவுனம் மட்டுமே அவரிடம் இருந்து வரும் சிறந்த பதிலாக இருக்கும். மக்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவர் திரைத்துறையில் மட்டுமல்லாது, அரசியலிலும் காலடி பதித்து தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகிறார்.