தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.