முதல் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாரா ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலை …!
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 250 ரன்கள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டிகளில் பங்கேற்றது. இந்த டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதன் பின்னர் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இந்நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா மட்டும் 123 ரன்கள் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஹேசல் வுட்,ஸ்டார்க்,லயன் ,கம்மின்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.