நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்….!!!
மருத்துவ படிப்பிற்கான தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு ஆன்லைன் பதிவு செய்ய நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான கடைசிநாள் நாளை மட்டும் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள் ntaneet.nic.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.