உளவு பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டினர்…!!! கைது செய்ய கோரி பா.ஜ.காவினர் ஆர்ப்பாட்டம்…!!!
குமரி மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் உளவு பார்த்துள்ளனர். இவர்கள் இருவரையும் மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கைது செய்ய கோரி தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் வலியுறுத்தி பா.ஜ.காவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த பாஜக தொண்டர் ஒருவர் மீது தீ பிடித்ததால் உடனடியாக தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.