எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

Default Image

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்டவர்  எஸ்.ராமகிருஷ்ணன் இவரது பெற்றோர் சண்முகம் மற்றும் மங்கையர்க்கரசி இவருடைய தந்தை வழித் தாத்தா திராவிட இயக்கத்தில் அதிக பற்றுடையவர்.ஆனால் தாய் வழித் தாத்தாவோ சைவ சமயப் பற்றுடையவர். இது எழுத்தாளருக்கு நல்ல ஒரு தெளிவினை ஏற்படுத்த உதவியது.இவர் இந்த இரு வீடுகளிலும் இலக்கியங்கள் மற்றும் சமூகச் சிந்தனைகளைப் படித்தும் அவற்றை பேசக்கூடிய சூழல் நிலவியதாகக் அவரே குறிப்பிடுகிறார். தற்போது எழுத்தாளர் தனது மனைவி சந்திரபிரபா மற்றும் குழந்தைகள் ஹரி பிரசாத் ,ஆகாஷ் ஆகியோருடன் சென்னை மாநாகரத்தில் வசித்து வருகிறார்.
Image result for எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
இவர் புதினங்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், நாடகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை மட்டுமல்லாமல் திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட தன் படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள் மற்றும் பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்களையும், திரைப்படங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.
மேலும் இவர் எழுதிய தண்டவாளம் கணையாழியில் வெளியாகி இருக்கிறது. தனது எழுத்து பணியை 1984இல் எழுதத் தொடங்கிய ஐம்பந்தைத்து எண்ணிக்கையில் உள்ள படைப்புகள் நூல்வடிவம் பெற்றுள்ளன.மேலும் தனது எழுத்து பணியை ஊடகத்திலும் எழுத தொடங்கினார்.அதில் ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து மற்றும் கதாவிலாசம், தேசாந்திரி மற்றும் கேள்விக்குறி இவர் எழுதிய தொடர்கள் இவருக்கு தீவிர இலக்கிய வட்டாரம் போன்றவற்றை தாண்டி பரவலான வாசகர்களை  ஈட்டித் தந்தது.மேலும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம் மற்றும்  இடாய்ச்சு,பிரான்சியம் மற்றும் கன்னடம், வங்காளம் மற்றும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய படைப்புகளை படைத்த எழுத்தாளரின் பணியை சிறப்பிக்கும் விதத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image result for எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்