மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : வானிலை ஆய்வு மையம்
குமரி மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து குமரி மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.