குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 10-ம் தேதி மியான்மர் பயணம்…!!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 4 நாள் அரசுமுறைப் பயணமாக, 10 ஆம் தேதி மியான்மர் செல்ல உள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 10-ம் தேதி மியான்மர் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 14-ம் தேதி வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் மூலம் இந்தியா-மியான்மர் இடையேயான நல்லுறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. மேலும், மியான்மர் பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
dinasuvadu.com