மேகதாது விவகாரம்…!திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!
திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
மேகதாதுவில் மத்திய அரசு கர்நாடக மாநிலத்துக்கு அணை கட்ட ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து , மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டமானது இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் மதிமுக , விசிக , சிபிஐ , சிபிஐஎம் , காங்கிரஸ் , மமக உள்ளிட்ட திமுகவின் தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அதே போல இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கும் , மனித நேய மக்கள் கட்சி-யும் பங்கேற்றுள்ளது.தோழமை கட்சியின் தலைவர்களான வைகோ , திருநாவுக்கரசர் , முத்தரசன் , தொல்.திருமாவளவன், பாலகிருஷ்ணன் அப்துல் சமத் , வீரபாண்டியன் அதேபோல திமுகவின் துரை முருகன் ,DR.பாலு அண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,மேகதாது அணை விவகாரத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் டிசம்பர் 4 ஆம் தேதி அதாவது இன்று திருச்சியில் போராட்டம் நடத்தப்படும்.மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தோழமைக் கட்சிகளுடன் விவாதிக்கப்பட்டது, போதிய நேரமில்லாததால் மற்ற கட்சிகளை அழைக்க முடியவில்லை.மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு உடனடியாக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும்.அதேபோல் பாஜகவும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.
அதன்படி மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடகாவுக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெறக் கோரி திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.