இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்…!நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் …!
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தினகரன் ஆஜரானார்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை விசாரித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் தினகரன் மீதான குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது. குற்றத்துக்கு ஆதாரம் உள்ளது என்ற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இதனால் லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
அதேபோல் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் இருப்பதால் தினகரனை விடுவிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது.
வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித்குந்த்ரா உட்பட 5பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி அதாவது இன்று தினகரனை நேரில் ஆஜராகவும் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தினகரன் ஆஜரானார்.