இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய டெங்கு காய்சசல்…!!!
திருவெற்றியூரை அடுத்து எண்ணூர் நேரு நகர் பகுதியரி சேர்ந்தவர் ராஜேஸ்வரி (28). இவரது கணவர் மாலி கூலித்தொழிலாளி (42). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.
இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு ஸ்டாண்லி பொருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. தீவிர சிகிசிச்சை பெற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.