ரன் மெஷினை அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து போடுங்கள்..!!ரிக்கி பாண்டிங்க் அட்வைஸ்..!!
ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டெஸ்ட் உள்ளபட டி20 களில் விளையாட உள்ளது.இந்நிலையில் இந்தியாவில் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வரும் கிங்கோலி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு எழுந்து வருகிறது.கோலி குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துகளைக் கூறிவந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்க்கும் தனது பங்கிற்கு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார் அதில் இந்திய வீரர் விராட் கோலி பற்றி கூறியுள்ளார். அதில் விராட் என்னும் ரன் மெஷினை எப்படி ஆப் பன்னறது போன்று பேசியுள்ளார். கடந்த 2017 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது அந்த ஆட்டத்தில் இந்திய ஆடிய போது கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் சொதப்பி 46 ரன் மட்டுமே எடுத்தார் என்று பாண்டிங்க் அந்த தொடரை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறார். மேலும் கோலியை ஆண்டர்சன் 5 முறை வீழ்த்தி உள்ளார்.மேலும் குறிப்பிட்டு கூறினால் கடந்த தொடரில் கூட நடுவர் தீர்ப்புப் பிழை காரணமாக கோலி அவரிடம் விக்கெட் கொடுக்காமல் ஆடினாரே ஒழிய மற்றபடி ஆண்டர்சனை கோலி ஆதிக்கம் செலுத்திவிட்டார் என கூற முடியாது.
முதலில் நாம் கோலியை கடந்த காலத்தில் ரன் எடுக்க விடாமல் அவரை கட்டிப்போட்டு விக்கெட்டை எடுத்தது யார் என்று பார்க்க வேண்டும்.அப்படி பார்த்தால் அவருக்கு நேர் எதிராக நல்ல வித சக்சஸ் ரேட் வைத்திருக்கும் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர்தான் விராட் கோலியை பயங்கரமாக படுத்தி எடுத்துள்ளார். ஆனால் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் கோலியை வீழ்த்துவது மிக கடினம். சுதந்திரமாக ரன்களை எடுக்க விரும்பும் ஒரு வீரர் தான் விராட் இவர் பெரிய ஈகோ உள்ளவர். எனவே அவரை தொடக்கத்தில் அவருடைய பவுண்டரி இலக்கு அருகே சில பீல்டர்களை நிறுத்தி பவுண்டரிகளை நாம் கட் செய்ய வேண்டும்.ஆஸ்திரேலிய வீரர்கள் முதலில் எடுத்த உடனே அவர் மீது ஆக்ரோஷம் காட்ட வேண்டாம் அவரை இறுக்கமாக மற்றும் சீராக ரன்களை அவருக்கு கொடுக்காமல் கட்டிப்போடுங்கள்.
மேலும் தேர்ட் மேன் திசையில்தான் விராட் பந்தைத்தொட்டு விட்டு அதிக ரன் எடுக்கிறார் எனவே எல்லா இடங்களிலும் வெவ்வேறு நிலைகளில் பீல்டர்களை நிறுத்தி நாம் ஏதோ அவருக்கு எதிராக செய்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல் 3வது ஸ்லிப்பை கோலிக்கு இன்னும் நெருக்கமாக நிறுத்தி வையுங்கள் ஏனெந்றால் அவர் அங்குதான் தன் கையைத் தளர்வாக்கி வரும் பந்துகளைத் திருப்பி விடுகிறார்.கோலி என்ன செய்தாலும்அதற்கு நாம் தயாராக தான் இருக்கிறோம் என்று பல்வேறு கோணங்களில் நாம் உணர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.இந்திய வீரர் விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமே ஒன்று கூடியுள்ளதே என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.