பிரபல நடிகையின் கனவை நனவாக்கிய இயக்குனர்….!!!
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகராக தான் உள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இவர் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவரது மார்க்கெட் குறையாமல் உள்ளது.இவர் பாகுபலிக்கு பிறகு, சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டியிலும் புரட்சி பெண்ணாக நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை தமன்னாவை வித்தியாசமான ரோலிலும் நடிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ராஜமவுலி தான். இவர் சிரஞ்சீவியுடன் நரசிம்ம ரெட்டி படத்திலும் வித்தியாசமான ரோலில் தான் நடித்துள்ளார்.
இதனைத்தடுத்து, நடிகை தமன்னா சிரஞ்சீவியுடன் தான் நடிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கிய சுரேந்தர் ரெட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும், தன ஒரு ரசிகையாக இந்த படத்தை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.