போலந்தில் தொடங்கியது ஐ.நா பருவநிலை மாநாடு
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா மாநாடு போலந்தில் தொடங்கியது.
உலக வெப்பமயமாதல் சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே இதனை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து இலக்கு நிர்ணயித்தன. இது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க, ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாரீசில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, 200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் உள்ள கடோவைஸ் நகரில் ஒன்று கூடியுள்ளனர். வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், பருவநிலை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.