ரூ.89 கோடி பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு …! எஃப்ஐஆர் ரத்து …!நீதிபதிகள் அதிர்ச்சி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.இதில் தமிழக அரசு தொடர்பாக பதில் அளிக்கப்பட்டது.அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.பின்னர் இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பெயர்ப்பட்டியல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் எஃப்ஐஆர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பு தெரிவித்த தகவலால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.