தெலங்கானா சட்டபேரவை தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா பேச்சு…!!
மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாரதிய ஜனதா கட்சி எதிரானது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
தெலங்கானாவில் 7-ம் தேதி சட்டபேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாராயண்பேட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று பேசினார்.
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே முத்தரப்பு போர் நிலவுவதாக கூறினார். தேவாலயங்கள், மசூதிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருக்கும் காங்கிரஸ், கோயில்களுக்கு மின்சாரம் வழங்க முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார். சந்திரசேகர் ராவும் காங்கிரசும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தவே முயல்வதாக தெரிவித்தார். மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாரதிய ஜனதா கட்சி எதிரானது எனவும் அமித் ஷா கூறினார்.
dinasuvadu.com