சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பு…கேரள நீதிமன்றம் அமைத்த குழு இன்று ஆய்வு…!!

சபரிமலையில் பாதுகாப்பு, வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய கேரள உயர் நீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழு இன்று தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
கேரளாவின் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் கடந்த மாதத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை என்றும் தெரிவித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ் சிரி ஜகன், பி.ஆர்.ராமன் மற்றும் டி.ஜி.பி ஹேமசந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தக் குழு சபரிமலையில் இன்று பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment