கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது…!! ஏன் தெரியுமா…?
கரும்பை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டோம். அனைவரும் கரும்பை விரும்பி உண்பதுண்டு. பொங்கல் என்றாலே கரும்பு தான் நாம் அதிகமாக உண்ணும் பொருளாக இருக்கும். இந்நிலையில் சிலர் கரும்பை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது வழக்கமாக இருக்கும். அனால் அவ்வாறு குடிப்பது தவறு. ஏன் தெரியுமா ?
கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வாய் வெந்து போய்விடுகிறது. ஏனென்றால் கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் உள்ளது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.
அந்த சமயத்தில், தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கிறது. இதனால் நாக்கு வெந்து விடுகிறது. இதனால் கரும்பு சாப்பிட்டு முடிந்து 15 நிமிடம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும்.