உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் புதினாவின் புதுமையான நன்மைகள்…!!!

Mint

புதினா நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது ஒரு மூலிகை இலையாகும். இதனை நாம் சமையலில் வாசனை பொருளாக மட்டும் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இது நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிப்பதுடன், பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சத்துக்கள் :

புதினா இலையில் நீர்சத்து, புதினா, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு சத்து, ஆசிட், ரிபோ மினோவின், தயாமின், உலோகச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் இந்த இலையில் அடங்கியுள்ளது.

பயன்கள் :

வலிகளை நீக்குகிறது :

புதினாவை நீர் விடாமல் அரைத்து, வலி உள்ள இடத்தில் பற்று போட்டால், தசை வலி, நரம்பு வலி, தசைவலி, தலை வலி போன்ற வலிகளை நீக்குகிறது.
மஞ்சள்காமாலை, நரம்புத்தளர்ச்சி, வறட்டு இருமல், சோகை, வாதம் போன்ற நோய்களுக்கு புதினா இலை ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

சரும ஆரோக்கியம் :

முகப்பரு உள்ளவர்கள், வறண்ட சருமம் உள்ளவர்கள் புதினா இலை சாற்றை பிழிந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

புதினாவை நிழலில் காய வைத்து, அதை எடுத்து பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அடிக்கடி ஏற்படும் வாந்தியை நிறுத்துவதற்கு கைகண்ட மருத்துவம் ஆகும்.

மூச்சு திணறல் :

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்து கொண்டு நீர் சேர்த்து 30 மிலி முதல் 60 மிலி வரை நீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை பருகி வந்தால் மூச்சு திணறல் நிற்கும்.

கூந்தல் ஆரோக்கியம் :

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி வந்தால் மூடியில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்